يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَتَّخِذُواْ الْيَهُودَ وَالنَّصَارَى أَوْلِيَاء بَعْضُهُمْ أَوْلِيَاء بَعْضٍ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ إِنَّ اللّهَ لاَ يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ {51}
நம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும், கிறித்தவர்களையும் உங்கள் பாதுகாவலர்களாக்கிக் கொள்ளாதீர்கள்!89 அவர்களில் ஒருவர் மற்றவருக்குப் பாதுகாவலர்கள். உங்களில் அவர்களைப் பொறுப்பாளராக்கிக் கொள்வோர் அவர்களைச் சேர்ந்தவரே. அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்.திருக்குர்ஆன் 5:51.
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் எனும் பழமொழி முழுக்க முழுக்க நேட்டோ நாடுகளுக்குத் தான் பொறுந்தும். அரேபியப் பிரதேசங்களில் கருப்புத்தங்கம் (எண்ணெய்) கண்டு பிடிக்கப்பட்டதிலிருந்து கண்ணில் எண்ணெயை ஊற்றிக்கொண்டு அரேபியப் பிரதேசங்களில் எப்பொழுது பிரச்சனை வெடிக்கும் உள்ளேப் புகுந்து கூறுபோட்டு ஆதாயம் தேடலாம் என்று நினைத்திருந்தவர்களுக்கு வேடன் விரித்த வலையில் வீழ்ந்த மானாய் ஆகிவிட்டது எண்ணெய் வளம் மிக்க லிபியா.
இதற்கு முன்பு ஈரானும்> ஈராக்கும் எல்;லைப் பிரச்சனையில் மோதும் பொழுது அவர்களிடமிருந்த துறுப்பிடித்த பழைய ஆயுதங்களை விற்பனை செய்யவேண்டி உட்புகுந்து இரு நாடுகளை பலவருடங்கள் மோதவிட்டு ஏராளமான ஆயுதங்களை கொள்ளை விலைக்கு விற்றுக் காசாக்கினர்.
அதற்கடுத்து குவைத்துக்கும்> ஈராக்குக்கும் பிரச்சனை மூன்ட பொழுது அதே ஆயுத விற்பனை யுத்தியுடனும் இன்னும் கூடுதலாக அதன் அண்டைநாட்டு மன்னர்களிடம் ஈராக்கின் ராணுவம் வலிமையாக இருப்பதால் எல்லைப் பாதுகாப்பு அவசியம் என்றுக் கூறி நோட்டோ நாடுகளின் வேலையில்லா ஹிப்பிகளை ராணுவ வீரர்கள் என்றப்பெயரில் டாலர் கணக்கில் சம்பளம் பேசி விட்டு மேன்பவர் ஏஜென்டாக மாறினர்.
லிபியாவில் யதார்த்தமாகவே மக்கள் புரட்சி உருவானது ஆனால் அதை இவர்களின் சுரண்டலுக்கு எவ்வாறு சாதகமாக்கிக் கொண்டனர் என்பதைப்பார்ப்போம். இப்பொழுது CONOCOPHILLIPS, MARATHON OIL CORP, HESS CORP, OCCIDENTAL PETROLEUM CORP ஆகிய அமெரிக்க எண்ணெய் கொள்முதல் நிறுவனங்கள் குறைந்த லாபத்தையே லிபியாவில் ஈட்டி வருவதால் அதிக லாபம் ஈட்டுவதற்காக அல்லது லிபியாவின் முழு எண்ணெய் கிணறுகளையும் மேற்காணும் நிறுவணங்களின் கீழ் நிரந்தரமாக்குவதற்காக லிபியா விஷயத்தில் பயங்கர சதி திட்டத்தை தீட்டி கச்சிதமாக காய் நகர்த்தி உள்ளனர்.
பிப்ரவரி 5ல் லிபியாவில் ஆட்சி மாற்றம் கோரி மக்கள் புரட்சி வெடித்தது மார்ச் 5க்கு இன்டர்போல் தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள 188 நாடுகளுக்கு ஆரஞ்சு நோட்டீஸ் அனுப்பி கடாபிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தஞ்சம் அளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தது. மார்ச் 12க்கு சூயஸ் கால்வாய் வழியாக இரண்டு அமெரிக்க ராட்சத போர் கப்பல்களை லிபியாவுக்கு அனுப்பி வைத்தனர். மார்ச் 15ல் ஃப்ரான்ஸ் தலைநகரில் நேட்டோவில் அங்கம் வகிக்கும் எட்டு நாடுகளின் பிரதிநிதிகள் கூடி லிபியாவின் போக்;கை கண்டித்து வாக்கெடுப்பு நடத்தினர் இதில் ஃப்ரான்ஸ் மட்டுமே எதிர்த்து வாக்களித்து பிற ஏழு நாடுகள் எதிர்ப்புத் தெரிவிக்காமல் மௌனம் காத்து நாடகமாடியது.
இதுஒரு செட்டப் என்பதை அறியாத கடாபி சந்தோஷத்தால் துள்ளிக்குதித்து போராட்டக்காரர்களை ஒடுக்குவதில் கடுமை காட்டினார் இதன் பின்னரே லிபியாக் கலவரத்தில் உயிர் பலி அதிகம் ஆனது. அடக்குமுறையை கடுமைப்படுத்தி இழந்த பல நகரங்களை போராட்டக்காரர்களிடமிருந்து ஒவ்வொன்றாக மீட்டெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் அதேக் கூட்டமைப்பு நியூயார்க்கில் அசவரமாகக் கூடி லிபியாவின் உயிர் பலியைக் கண்டித்து தீர்மாணம் நிறைவேற்றி அதை மார்ச் 18ல் ஐநாவின் கவனத்திற்கு கொண்டுசென்றனர் (டம்மி ஐ.நாவின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு முன்னரே அனைத்தும் நடந்து முடிந்து விட்டது என்பதற்கு மேற்காணும் தேதி வாரியாக குறிபிடப்பட்ட நிகழ்வுகளைக் கவனிக்கவும்).
ஐ.நா கடாபியின் மீது கண்டனம் தெரிவித்ததும் கடாபி அதற்கு கட்டுப்படுவதாக அறிவித்து விட்டு ராணுவத் தாக்குதலை நிருத்தினார் ஆனாலும் ஏற்கனவே சி.ஐ.ஏ யின் ஃபித்னாப் படை பென்காசியில் கலவரக் காரர்களுடன் கை கோர்த்திருந்ததால் பென்காசியில் மட்டும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்.
ராணுவத்தாக்குதலை நிருத்துவதாகக் கூறிவிட்டு தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாக ஐ.நாவிடம் பொய் கூறி அதன் ஒப்புதலை மார்ச் 20க்கு பெற்று அமெரிக்கா> ஃப்ரான்ஸ்> இத்தாலி> கனடா> டேனீஸ்> இங்கிலாந்தின் 25 போர்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களுடன் லிபியாவின் பலப் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் 110 ஏவுகனைகளை எடுத்த எடுப்பிலேயே வீசி தாக்குதலைத் தொடுத்து சுமார் 6 மில்லியன் மக்கள் தொகையை மட்டும் கொண்ட சின்னஞ்சிறிய லிபியாவை கரும் புகையில் மூழ்கடித்தது.
1972ல் ஜெர்மன் முனிச்சில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளச் சென்ற இஸ்ரேலிய பயங்கரவாதிகளை கடாபி கொன்றதாகவும் 1986ல் வீயன்;னாவிலும்> ரோமிலும் நடந்த குண்டு வெடிப்பில் கடாபிக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டி ரீகன் அரசு இங்கிலாந்து வழியாக கடாபியின் அரண்மனையில் குண்டு வீசினார் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தவில்லை.
இன்றும் அதே நிலையை கடைப்பிடித்து கடாபியைக் கொன்றிருந்தால் பல்லாயிரக்கணக்கான லிபியர்களை கொன்றதற்காகவும்> இஸ்லாத்திற்கு எதிரானப் போக்கை கடைப் பிடித்து கொடுங்கோல் ஆட்சி புரிந்ததற்காகவும் அதை சரி என வரவேற்றிருக்கலாம்> ஆனால் எந்த மக்களை காப்பதற்காக புறப்பட்டோம் என்றுக்கூறி களமிறங்கினார்களோ அந்த மக்களையே அதிலும் முஹம்மது(ஸல்) அவர்களை கேலிச் சித்திரம் வரைந்த டேனீஸ் நாட்டுப் படைகளையும் இணைத்துக் கொண்டு கொன்று குவிப்பது வேதனை அளிக்கிறது.
பிப்ரவரி 5ல் லிபியாவில் மக்கள் புரட்சி வெடித்து பல்லாயிரக் கணக்கான புரட்சியாளர்கள் கடாபி அரசின் ராணுவத்தினரால் கொல்லப்பட்டது வடிகட்டிய வரம்பு மீறல் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை ஆனால் இது உள்நாட்டுப் பிரச்;சனை இதுபோல் உலகில் பலநாடுகளில் நடக்கவேச் செய்கின்றன. உதாரணத்திற்கு இலங்கையில் தனி நாடுக் கோரிய தமிழர்கள் இலங்கை அரசின் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர் மேற்குலக நாடுகளில் வாழும் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கானோர் இதைக் கண்டித்து ஊர்வலம் சென்று கண்டனம் தெரிவித்தனர். அப்பொழுது அப்பாவி மக்களை கொல்லக் கூடாது என்று மட்டுமே இலங்கைக்கு ஐ.நா கண்டனம் தெரிவித்தது.
இலங்கையில் வெறும் தேயிலைத் தூள் தான் கிடைக்கும் என்பதால் நேட்டோ நாடுகள் அவசரக் கூட்டங்கள் நடத்தி சதி திட்டங்கள் தீட்டி போர் கப்பல்களை இலங்கைக்கு அனுப்பவில்லை. இலங்கையில் எண்ணெய் வளம் இருந்தால் இந்நேரம் ராஜபக்ஷே மாளிகை தூள் தூளாகி இருக்கும் இவர்கள் வழிப்பறிக் கொள்ளையர்களை விடக் கீழானவர்கள் என்பதற்கு ஈராக்கையும்> அதற்கடுத்து லிபியாவையும் குறி வைத்தது மிகப்பெரிய உதாரணமாகும்.
ஐ.நா உருவாக்;கப்பட்டதிலிருந்தே அது முஸ்லீம் நாடுகளுக்கு உதவியாக இருந்ததில்லை என்பதற்கு லிபியாவை தாக்குவதற்காக ஐநாவின் ஒப்புதல் பெறுவதற்கு முன்பே போர் கப்பல்கள் லிபியாவில் முகாமிட்டு விட்டதும்> இன்டர்போல் தனது கட்டுப்பட்ட நாடுகளுக்கு ஆரஞ்சு நோட்டீஸ் அனுப்பி எச்சரிக்கை விடுத்ததும் ஆதாரமாகும்.
1947ல் இத்தாலியிடமிருந்து விடுதலைப் பெற்று 1951ல் ஆரம்ப காலத்திலேயே (கடாபி பொறுப்புக்கு வருவதற்கு முன்னரே) ஐநாவின் உறுப்பு நாடான லிபியா இன்று ஐ.நாவின் ஒருதலை சார்பால் நிலைகுலைந்து நிற்கிறது. ஐ.நா வெறும் யூத> கிறித்தவ நாடுகளின் கட்டமைப்புக்கும் அவர்களின் பாதுகாப்புக்கு மட்டுமே உருவாக்கப்பட்டது என்பது தொடர்ந்து நிரூபணமாகி வருவதால் இனியும் ஐ.நாவை நம்பாமல் முஸ்லீம் நாடுகள் வெளியேறி விடுவது தான் சிறந்தது.
5:51. நம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும்> கிறித்தவர்களையும் உங்கள் பாதுகாவலர்களாக்கிக் கொள்ளாதீர்கள்!89 அவர்களில் ஒருவர் மற்றவருக்குப் பாதுகாவலர்கள். உங்களில் அவர்களைப் பொறுப்பாளராக்கிக் கொள்வோர் அவர்களைச் சார்ந்தவரே. அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்