திங்கள், அக்டோபர் 17, 2011

.



இந்திய தொல்லியல் துறையின் அலச்சியப் போக்கினால் சிதிலமடையும் நினைவுச் சின்னங்கள்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இந்தியாவை முகலாயர்கள் ஆட்சி செய்த காலத்தில் கை தேர்ந்த கட்டிடக் கலை நிபுணர்களைக் கொண்டு ஏராளமான பொருட் செலவிவ் அரசு அலுவலகங்கள், சாலைகள், பேரூந்து நிலையங்கள், ரயில் நிலையங்களை அழுத்தமாக அமைத்தனர்

மசூதிகளை கட்டினர், ஹிந்து, கிருஸ்தவ, சீக்கிய மதத்தினருக்கும் தங்களின் வழிபாட்டுத்தலங்களை தங்களின் விருப்பதிற்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்வதற்காக ஏராளமான நிலங்களை ஒதுக்கிக் கொடுத்து அரசு கருவூலத்திலிருந்து பெரும் தொகையை வழங்கினர்

அத்துடன் உலக மக்களின் கவனத்தை இந்தியாவை ஈர்க்கச் செய்யும் விதமாக இந்தியா முழுவதும் ஏராளமான சுற்றுலாத் தலங்களை அமைத்து அங்கும் கண்களை கவரும் விதம் கலை நயத்துடனான அழகிய கட்டிடங்களை அமைத்தனர்.

அவைகள் இன்றளவும் கம்பீரமாக முகலாயர்களின் ஆட்சி காலத்தை நிணைவுறுத்தும் விதமாக நிமிர்ந்து நின்று காட்சி அளித்துக்கொண்டிருக்கின்றன

அவைகளில் அரசு அலுவலகங்கள், பொது கட்டிடங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன அதையும் தாண்டி சிறிது பழுது ஏற்பட்டாலும் உடனுக்குடன் சரி செய்யப்பட்டு விடுகின்றன.

கோயில்களில் பழுது ஏற்பட்டால் ஊடகங்;கள் வாயிலாக அரசு கவனத்திற்கு எடுத்துச் சென்று ஏராளமான பொருட் செலவில் சரிசெய்யப்பட்டுவிடுகின்றன.

ஆனால் பள்ளிவாசல்களில் பழுது ஏற்பட்டால் அரசு கண்டு கொள்வதில்லை,

அதேப்போன்று இஸ்லாத்தை நினைவுப்படுத்தும் விதமான நினைவுச் சின்னங்களில் பழுது ஏற்பட்டால் தொல்லியல் துறை அறவே கண்டு கொள்வதில்லை.

சமீபத்தில் ஹைதராபாத்தில் இரண்டு மாதங்களாக விடாமல் பெய்த அடை மழையின் பொழுது பள்ளிவாசல்களின் மினாராக்களை நிணைவுப் படுத்துவதுப் போன்று முகலாயர்களால் வடிவமைக்கப்பட்ட உலகப் புகழ் பெற்ற சார்மினார் கட்டிடத்தின் நான்கு கலைநயமிக்க தூண்களில் ஒன்று பயங்கர சத்தத்துடன் இடிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் சுற்றுலாப் பயணிகளின் வரத்து பெருமளவு குறைந்து விட்டதாக அதைச் சுற்றியுள்ள வியாபாரிகள் கூறுகின்றனர்.

சார்மினார் கட்டிடத்தின் சிறிது தூரத்திலிருந்து பல வருடங்களாகவே உறுதியான வேர்களைக் கொண்ட ஆலமரம், அரச மரம் வளர்ந்து வந்ததை தொல்லியல் துறை கண்டு கொள்ளவில்லை.

இதன் காரணத்தினால் அதன் வேர்கள் ஆழமாக பூமிக்கடியில் பரவிச்சென்று கட்டிடத்திற்கு பாதிப்பை எற்படுத்தி இருக்கலாம் என்றே பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர்.

இது 400 வருடம் பழமை வாய்ந்த கட்டிடம் என்பதால் இப்படித் தான் விழும் என்று பொறுப்பற்ற முறையில் பதிலளித்த தொல்லியல் துறை மேலாய்வாளர் வீரபத்ர ராவின் பேச்சை ஏனைய தொல்லியல் துறை நிபுணர்கள் கண்டித்ததுடன் முறையற்றப் பராமரிப்பின் காரணமாகவே இது இடிந்திருக்கலாம் என்றே கட்டிக் கலை நிபுணர்களும் கூறுகின்றனர்

ஹைதராபாத் நகர பொதுமக்கள், நாட்டின் நலம் கருதும் நடுநிலையாளர்கள், சிந்தனையாளர்கள் தொல்பொருள் இலாக்காவின் மெத்தனப் போக்கை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உடனடியாக சார்மினாரின் இடிந்த தூணை கட்டி அதற்கு சற்று தொலைவில் வளர்ந்துள்ள ஆலமரம், அரச மரங்களை அப்புறப்டுத்தவும், இனிவரும் காலங்களில் முறையான பராமரிப்பை மேற்கொள்ளவும் நடிவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்.




وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்.