திங்கள், ஜூன் 11, 2012

.

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُم بِأَلْفٍ مِّنَ الْمَلآئِكَةِ مُرْدِفِينَ {9}

8:9. நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடிய போது ''உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களின் மூலம் நான் உங்களுக்கு உதவுபவன்'' என்று உங்களுக்குப் பதிலளித்தான்.


اللهم عليك ببشار الاسد

அல்லாஹூம்ம அலைக்க பஸார் அல் அசாத்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கடந்த ஒரு வருடமாக சிரியாவில் நடைபெற்று வரும் கலவரம் இதுவரை முற்றுப் பெறவில்லை. முற்றுப்பெறுவதற்கான எந்த நடிவடிக்கையையும் அந்நாட்டு அதிபர் மேற்கொண்டதாகத் தெரியவில்லை, உலகநாடுகளின் பாதுகாப்பு சபை என்று சொல்லக் கூடிய ஐ.நா.வும் கலவரத்தை ஒடுக்க உருப்படியான எந்த முடிவையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.
அதிபர் பதவியிலிருந்து இறங்க மறுத்தாலும் நாட்டின் குடிமக்கள் அநியாயமாக இனவெறிப் பிடித்த ராணுவத்தினரால் கர்ண கொடூரமாக கொல்லப்படுவதையாவது தடுத்து நிருத்தலாம் மாறாக தாமே ராணுவத்தைத் தூண்டிவிடும் இனவெறிப் பிடித்தவராக பஸார் அல் ஆசாத் இருப்பது மிகுந்த கவலை அளித்து வருகிறது. 

கடந்த ஒரு வருடமாக இதுவரை அநியாயமாக அரசுப் படைகளால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை சுமார் 8500 ஐத் தாண்டி விட்டதாக உலக ஊடகங்கள் கூறினாலும் அதை விட இரண்டு மடங்குகள் அதிகமாக இருக்கலாம் என்றே பொதுவான மக்கள் கணிக்கின்றனர்.

நாட்டு மக்கள் எக்கேடு கெட்டும் தொலையட்டும் தன் வீட்டு மக்கள் பாதுகாப்பாக இருந்தால் போதும் என்றுக்கருதி கொலைவெறித்திட்டம் தீட்டப்படுவதற்கு முன்பே தனது காதல் மனைவி (இங்கிலாந்தைச்சேர்ந்த) அஸ்மாவையும் பிள்ளைகளையும் தனி விமானத்தில் இங்கிலாந்துக்கு அனுப்பிவிட்டார்.

கலவரத்தின் பிண்ணனி !!!

இயற்கை எழில் கொஞ்சும் விளைச்சல் மிக்க பூமி சிரியா. இதில் தேரா எனும் மாகாணம் அதிக அளவில் விளைச்சல் செய்யக் கூடிய விவசாய பூமியாகும்.

திடீரென மழை குறைந்ததால் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறையுடன் ஈராக் அகதிகள் பெருமளவு தேராவில் குடியேறியதால் விவசாய பூமியாகிய தேரா வறண்டு பஞ்சம் ஏற்பட்டது. தேராவின் காலி நிலங்களை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்று கிணறுகள் தோண்ட கடனுதவி வழங்கும் திட்டத்தை சிரிய அரசு வகுத்து தேராவின் கவர்னர் ஃபைசல் அல்கல்தூமிடம் கொடுக்கப்பட்டது. இத்திட்டத்தில் அதிகமான நிலங்களை தனது வர்க்கத்தினருக்கே (ஷியாக்களுக்கு) ஃபைசல் அல்கல்தூம் தாரை வார்த்தார் இதை அரசும் கண்டு கொள்ள வில்லை.

தேரா நகர் சன்னி முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழக் கூடிய பகுதி என்பதால் இந்த அநீதியை நினைத்து அதிகம் சிந்திக்கும் நிலைக்கு தேரா வாழ் சன்னி முஸ்லீம்கள் தள்ளப்பட்டனர். இது தேராவில் மட்டும் நடக்கும் பிரச்சனை அல்ல ஒட்டு மொத்த சிரியாவின் நிலையும் இது தான். வெறும் 12 சதவிகிதத்தினர் மட்டும் (ஷியாக்கள்) வாழும் சிரியாவில் அதிபர் பொறுப்பிலிருந்து அரசின் உயர் மட்டப் பொறுப்புகள் வரை அவர்களே கோலோச்சுகின்றனர். 88 சதவிகிதத்தினர் வாழும் சன்னி முஸ்லீம்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே அரசு அதிகாரங்களில் அமர்த்தப்படுகின்றனர்.

தேராவின் கவர்னர் ஃபைசல் அல்கல்தூமினால் ஷியாக்களுக்கு அதிகமான நிலங்களை தாரைவாரத்த அநீதி வெளிப்படையாக நடந்த பொழுது தான் துனிஷியாவில் புரட்சி வெடித்தது.

துனிஷியாவின் புரட்சி சிரிய மக்களை சிந்திக்கத் தூண்டியது அதன் வெளிப்பாடு தான் ஆட்சி மாற்றம் கோரி மார்ச்
15, 2011ல் தேராவில் முதன் முதலில் போர் கொடி உயர்த்தப் பட்டு பஸார் ஒழிக, ஈரான் ஒழிக, ஷியாக்கள் ஒழிக எனும் கோஷம் விண்ணதிரச்செய்தது. இதுவே சிரியா முழுவதும் பிரதிபலித்தது. 

இந்த நேரத்தில் ஆட்சியை விட்டு இறங்கினால் கண்டிப்பாக அதிபர் பதவிக்கு சன்னி ஒருவர் தேந்தெடுக்கப்படுவார் என்பதை திட்டவட்டமாக அறிந்த ஈரான் பஸாரை கீழிறங்க விடாமல் முட்டுக் கொடுத்தது.

நுனிப்புல் மேயும் ஐநா.
ஆட்சி மாற்றம் கோரப்பட்ட மற்ற வளைகுடா நாடுகளின் விஷயத்தில் அதிக கவனம் எடுத்துக் கொண்ட ஐ.நா. சிரியா விஷயத்தில் மட்டும் நுனிப்புல் மேய்வதற்கு காரணமென்ன ? 

  • இஸ்லாத்தை சரியான வடிவில் பேணக் கூடிய சன்னி முஸ்லீம்களை இஸ்லாத்திற்கு அறவே சம்மந்தமில்லாத ஷியாக்கள் அரசு துணையுடன் கறுவறுப்பது அவர்களுக்கு திருப்தியை அளிக்கிறது.
  • நேட்டோப் படைகளை சிரியாவுக்குள் அனுப்பி கலவரத்தை ஒடுக்க நினைத்தால் சிரியா இஸ்ரேலுக்கு மிக அருகில் இருப்பதால் ஈரானும் சிரியாவுக்கு மிக அருகில் இருப்பதால் நேட்டோப் படைகளுக்கும் சிரியாவின் ராணுவத்திற்கும் இடையில் சண்டை மூண்டால் அது கண்டிப்பாக ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் சண்டை மூளும் அபாயம் ஏற்படலாம்.
  • சிரியா மீது ராணுவ நடிவடிக்கையை அமெரிக்கா மேற்கொள்ள நினைத்தால் பெரும் பூகம்பமே வெடிக்கும் என்று அப்டோபர் 31,2011 சன்டே டெலிகிராப்புக்கு பஸார் அளித்தப் பேட்டி தனது கள்ளக் குழந்தை இஸ்ரேல் விஷயமாக அமெரிக்காவை சிதிக்கத்தூண்டி இருக்கும். அதனால் இஸ்ரேலின் கைப்பாவை ஐ.நா சிரியாவில் நடந்தேறும் அப்பாவி மக்களின் மீதான அத்துமீறலை முடிவுக்குக் கொண்டு வர நடிவடிக்கையை மேற்கொள்ளாது.
  • ஐ.நா.சபை தூங்கிக் கொண்டா இருக்கிறது என்று உலகம் நினைத்து விடக்கூடாது என்பதற்காக அவ்வப்பொழுது பஸார் அல் ஆசாதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றுவதும் கோபி அனானை பஸார் அல் ஆசாதை நேரடியாக சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்த அனுப்பி உள்ளதுமாகும்.
  • ஐ.நா, மற்றும் அரபு லீக்கின் பிரதிநிதியாக பஸாருடன் பேச்சு வார்த்தை நடத்த அனுப்பப்பட்ட கோபி அனான் மார்ச்12 அன்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் ஷியா ராணுவத்தினரால் 63 நிராயுதபாணிகள் கழுத்தறுக்கப்பட்டு வீதி தோறும் பிணங்களாக குவிக்கப்பட்டனர். இதில் ஏராளமான பெண்கள் குழந்தைகள் அடங்குவர். இந்த வெறும் பேச்சு வார்த்தை எங்களை ஒன்றும் செய்யாது என்பதையே மேல்படி மனிதாபிமானமற்ற கொலைகள் உணர்த்துகின்றன.

பலவீனங்கள். 

துனிஷியா போராட்டமே சிரியாவின் போராட்டத்திற்கு உந்துதலாக அமைந்தக் காரணத்தால் துனிஷியா மக்களைப் போன்று சர்வாதிகார ஆட்சி ஒழிக என்ற கோஷம் மட்டுமே சிரிய மக்கள் எழுப்பி இருக்க வேண்டும் மாறாக ஷியா ஒழிக, ஈரான் ஒழிக, என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டதால் (இது ஆரம்ப காலத்தில் எழுப்பப்பட்டு அப்பொழுதே நிருத்தப்பட்டு விட்டாலும்) இதை உலக கவனத்திற்கு சிரியா எடுத்துச்சென்று இது சவுதி அரேபியாவின் சதி என்றும் இது ஆட்சி மாற்றத்திற்கான போராட்டம் அல்ல இது சன்னி - ஷியாக்களின் மோதல் என்றும் திசை திருப்பி விட்டது.

பஸாரின் சர்வாதிகாரத்தை நிறுத்துமாறு முஸ்லீம் நாடுகளின் கூட்டமைப்பாகிய அரபு லீக் பல தடவை கோரிக்கைளை முன் வைத்தும் எதற்கும் கட்டுப்படாத பஸாரின் போக்கை சவுதி அரேபியா வன்மையாக கண்டித்தது. பஸாரை கட்டுப்படுத்தத் தவறினால் அரபு லீக்கிலிருந்து வெளியேறப் போவதாக கடுமையான கன்டணத்தை அரபு லீக்குக்கு சவுதி அரேபியாப் பதிந்தது. இதையடுத்து நவம்பர் 10, 2011ல் கெய்ரோவில் அவசரமாக கூட்டப்பட்ட அரபு லீக்கிலிருந்து துரிதமாக சிரியா நீக்கப்பட்டதும் சிரியாவில் உள்ள சவுதி தூதரகம் ஷியாக்களால் அடித்து நொறுக்கப்பட்டது. 

சிரியா தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது ஒபாமாவின் தனி முடிவாகும் ஷியா காரரான பஸார் ஈரானுடன் இணைவதற்கு இதுவே உந்துதலாக அமைந்தது. அமெரிக்காவில் கூட்டப்பட்ட ஒரு ஊடகவியாளர்கள் சந்திப்பில் 2008ல் ஒபாமாவை எதிர்த்து நின்ற மெக்கெய்ன் சிரியாவில் ராணுவ நடிவடிக்கையை மேற்கொள்ளாதது ஏன் என்று ஒபாமாவிடம் கேள்வி எழுப்பிய பொழுது அனைத்து விதத்திலும் சிரியா தனிமை படுத்தப்படவேண்டும் ராணுவ நடிவடிக்கை எடுக்க முடியாது என்று பதிலளித்தார். 

சிரியா கலவரத்தை திரைமறைவில் அமெரிக்காத் தூண்டுவதாக பிப்ரவரி 4ல் விக்கிலீக்கஸ் அறிவித்திருந்தது ஒபாவின் இந்த பதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

இதன் பின்னரே ஈரான் துணிந்து சிரியாவின் டார்டஸ் துறைமுகத்தில் தனது போர் கப்பலை நிறுத்தியது இதை யாரும் தட்டிக்கேட்க முடியவில்லை.  

அரபு லீக்கிலிருந்து சிரியா நீக்கப்பட்டப் பின்னரே சன்னி முஸ்லீம்கள் மீதான வன்கொடுமைகள் சிரிய ராணுவத்தினரால் கட்டவிழ்த்து விடப்பட்டன. 

வேறுவிதமான நெருக்கடிகளை கொடுப்பதற்கு பதிலாக அரபு லீக்கிலிருந்து சிரியா நீக்கப்பட்டது ஷியா பிரிவைச் சேர்ந்த பஸாருக்கும் அவர்களால் நிரப்பட்ட ராணுவத்தினருக்கும் சன்னி முஸ்லீம்களை குறிவைத்து வேட்டையாடுவதற்கு வசதியாக அமைந்து விட்டது. 

இறைவனிடம் கையேந்துங்கள்.
அரபு லீக்கிலிருந்து நீக்கப்பட்ட சிரியா ஈரானுடன் மிகவும் நெருங்கி விட்டதால் ஈரானிகள் பெருமளவு சிரியாவுக்குள் நுழைந்து ராணுவத்தினருடன் கை கோர்த்து விட்டதால் சன்னி முஸ்லீம்களின் நிலை நாளுக்கு நாள் சிரியாவில் கேள்விக் குறியாகி வருகிறது.


ஏற்கனவே இங்கிலாந்து. அமெரிக்கா தனது தூதரகங்களை சிரியாவில் மூடி விட்டதால் பிப்ரவரி 10 அன்று ஜெர்மனியும் தூதரகத்தை மூடிவிட்டது. எஞ்சி இருக்கும் வெளிநாட்டு தூதரகங்களும் இழுத்து மூடும் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

பிப்ரவரி 21 அன்று ஈரானின் போர் கப்பல் ஹோம்ஸ் நகரின் டார்டஸ் துறை முகத்தில் கொண்டு வந்து நிருத்தப்பட்டதையடுத்து அங்கிருந்து பெருவாரியாக பெண்கள், குழந்தைகள், முதியோர்கள், நோயாளிகள் அதிமமாக வெளியேறி வருகின்றனர்.


பிப்ரவரி 9 அன்று ஒரே நாளில் ஹோம்ஸ் நகரின் குடியிருப்புகள் மீது பீரங்கி தாக்குதல் நடத்தப்பட்டதில் 260 பேர் கொல்லப்பட்டும் 1000 த்திற்கும் மேற்பட்டோர் குற்றுயிரும் குறை உயிருமாய் ஆஸ்பத்திரிகளுக்கு அள்ளிக்கொண்டு செல்லப் பட்டுள்ளனர்.

மார்ச் 12ல் நடந்த 63 படுகொலைகள் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் அல்ல. வீடு, வீடாகப் புகுந்து ஒன்றிரண்டு குழந்தைகளுடன் தனித்திருக்கும் பெண்களை அவர்களின் குழந்தைகளை ஈவிறக்கமின்றி கொன்றுவிட்டு அவர்களை கற்பழித்து கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்து கிடப்பவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்கான ஆம்புலன்ஸ்கள் அரசு மருத்துவமனைகளில் அரசு மூலம் தடுக்கப்பட்டு விட்டது சொந்த வாகணங்களில் அல்லது அதிகமான வாடகைக்கு வாகணங்கள் அமர்த்தியும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கின்றனர் இதற்கு வசதி இல்லாதவர்களின் உயிர்கள் அவ்விடத்திலேயே கிடந்து இறக்கும் பரிதாப நிலை உருவாகிறது.

ஆங்காங்கே ஒன்றிரெண்டு உதவிப் பணிகளை செய்து வந்த செஞ்சிலுவை சங்கமும் மார்ச் 3ம் தேதி பாபா அம்ர் நகரில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு சேவை செய்ய நுழைந்தபோது இனவெறிப் பிடித்த அரசுப் படையினரால் தடுக்கப்பட்டு விட்டது.

ஐ.நா.சபை துரிதமாக நடிவடிக்கை எடுத்து நேட்டோப் படைகளை சிரியாவுக்குள் அனுப்பினாலும் நேட்டோப் படையினர் முஸ்லீம்களை பாதுகாப்பதற்கு பதிலாக எதிராக மாறி விட்டால் இன்னும் நிலை மோசமாகலாம்.

மிகப் பெரிய நெருக்கடிக்கு உள்ளான சிரிய முஸ்லீம்களுக்காக சவுதிஅரேபியாவின் பள்ளிவாசல்களின் தொழுகைகளில் துஆ கேட்க ஆரம்பித்து விட்டனர்.

இனச்சுத்திகரிப்பு வியூகம் வகுத்து செயல்படுவதால் கொடுங்கோலன் பஸாரை இறைவா ! இன்றைய தினம் உன்னிடம் ஒப்படைக்கிறோம்,  அல்லாஹூம்ம அலைக்க பஸார் அல் ஆசாத் என்ற துஆவை தொழுகையின் ஸஜ்தாவிலும், தொழுகை முடிந்தப் பிறகும் கேளுங்கள்.


இவ்வாறு கேட்கப்படுகின்ற துஆவின் மூலமாகவே இறைவன் அவர்களுக்கு உதவுவான் கொடுங்கோலன் பஸாரை பதவியை விட்டு இறங்கி ஓட வைப்பான்.

போர் காலங்களில், அபாயகரமான சூழ்நிலையில் இறைவனிடம் பாதுகாப்புக் கோருவது எதிரிகளை செயலிழக்கக் கோரி இறைஞ்சுவது நபி வழி.

பத்ர் போருக்கு முன்
போர் நிகழ முன்னரே நபி(ஸல்) அவர்கள் அதிகமதிகம் அழுதழுது அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். அவர்கள் அழுததால் ஏற்பட்ட உடல் அசைவினால் அவர்களது தோலில் போட்டிருந்த போர்வை கீழே விழ, அபூபக்ர் (ஸல்) அவர்கள் அதை எடுத்து அவர்களின் தோலில் போட்டவாறு ஆறுதல் கூறுவார்கள். (முஸ்லிம்)

அகழ்ப்போருக்கு முன்
 (அகழ்ப்போரின்போது ஒன்று திரண்டு தாக்க வந்த எதிர்) அணியினருக்குக் கெதிராக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்தார்கள். அப்போது, 'இறைவா! திருக்குர்ஆனை அருள்பவனே! விரைவாகக் கணக்கு வாங்குபவனே! (சத்திய மார்க்கத்தை வேரறுக்க ஒன்று திரண்டு படையெடுத்து வந்துள்ள இந்த) அணியினரைத் தோற்கடிப்பாயாக! இறைவா! இவர்களைத் தோல்வியுறச் செய்து நடுக்கத்திற்குள்ளாக்குவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள். 4115. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்

சிரியாவில் பெரும்பான்மையான மக்கள் சத்தியத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களை பின்பற்றுவோர் என்பதால் சத்தியத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும், அவர்களின் ஆருயிர் தோழர்களையும் மறுத்து இஸ்லாத்தை விட்டு வெளியேறிய ஷியாக்கள் பெரும்பான்மை முஸ்லீம்கள் வாழும் நாட்டை ஆளத் தகுதியற்றவர்கள்.

பஸாரின் தந்தை ஆசாத் ஒரு ராணுவ புரட்சியின் மூலம் ஆட்சியைப பிடிக்கும் வரை இன்றைய ஆட்சியாளர்களாகிய அலாவி வர்க்கத்தை (அலியை பின்பற்றுவோர்) சேர்ந்தவர்கள் சிரியாவின் மூலை முடுக்குகளில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே இருந்தனர். 
 
கொடுங்கோலன் பஸார் அல் ஆசாத் பதவியை விட்டு இறங்கி ஓட பிரார்த்தனை செய்யுங்கள், சிரியாவுக்குள் நுழைந்த ஈரானிகள் செயலிழக்க பிரார்த்தனை செய்யுங்கள்,

பிரார்த்தனை செய்வதை இலேசாக எண்ணி விட்டு வடாதீர்கள், மறந்து விடாதீர்கள் அதை அல்லாஹ் அங்கீகரிப்பான்.

8:9. நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடிய போது ''உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களின் மூலம் நான் உங்களுக்கு உதவுபவன்'' என்று உங்களுக்குப் பதிலளித்தான்.




وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

செவ்வாய், நவம்பர் 15, 2011

.


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَتَّخِذُواْ الْيَهُودَ وَالنَّصَارَى أَوْلِيَاء بَعْضُهُمْ أَوْلِيَاء بَعْضٍ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ إِنَّ اللّهَ لاَ يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ {51}



நம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும், கிறித்தவர்களையும் உங்கள் பாதுகாவலர்களாக்கிக் கொள்ளாதீர்கள்!89 அவர்களில் ஒருவர் மற்றவருக்குப் பாதுகாவலர்கள். உங்களில் அவர்களைப் பொறுப்பாளராக்கிக் கொள்வோர் அவர்களைச் சேர்ந்தவரே. அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்.திருக்குர்ஆன் 5:51. 
 

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் எனும் பழமொழி முழுக்க முழுக்க நேட்டோ நாடுகளுக்குத் தான் பொறுந்தும். அரேபியப் பிரதேசங்களில் கருப்புத்தங்கம் (எண்ணெய்) கண்டு பிடிக்கப்பட்டதிலிருந்து கண்ணில் எண்ணெயை ஊற்றிக்கொண்டு அரேபியப் பிரதேசங்களில் எப்பொழுது பிரச்சனை வெடிக்கும் உள்ளேப் புகுந்து கூறுபோட்டு ஆதாயம் தேடலாம் என்று நினைத்திருந்தவர்களுக்கு வேடன் விரித்த வலையில் வீழ்ந்த மானாய் ஆகிவிட்டது எண்ணெய் வளம் மிக்க லிபியா.

இதற்கு முன்பு ஈரானும்> ஈராக்கும் எல்;லைப் பிரச்சனையில் மோதும் பொழுது அவர்களிடமிருந்த துறுப்பிடித்த பழைய ஆயுதங்களை விற்பனை செய்யவேண்டி உட்புகுந்து இரு நாடுகளை பலவருடங்கள் மோதவிட்டு ஏராளமான ஆயுதங்களை கொள்ளை விலைக்கு விற்றுக் காசாக்கினர்.

அதற்கடுத்து குவைத்துக்கும்> ஈராக்குக்கும் பிரச்சனை மூன்ட பொழுது அதே ஆயுத விற்பனை யுத்தியுடனும் இன்னும் கூடுதலாக அதன் அண்டைநாட்டு மன்னர்களிடம் ஈராக்கின் ராணுவம் வலிமையாக இருப்பதால் எல்லைப் பாதுகாப்பு அவசியம் என்றுக் கூறி நோட்டோ நாடுகளின் வேலையில்லா ஹிப்பிகளை ராணுவ வீரர்கள் என்றப்பெயரில் டாலர் கணக்கில் சம்பளம் பேசி விட்டு மேன்பவர் ஏஜென்டாக மாறினர்.

லிபியாவில் யதார்த்தமாகவே மக்கள் புரட்சி உருவானது ஆனால் அதை இவர்களின் சுரண்டலுக்கு எவ்வாறு சாதகமாக்கிக் கொண்டனர் என்பதைப்பார்ப்போம். இப்பொழுது CONOCOPHILLIPS, MARATHON OIL CORP, HESS CORP, OCCIDENTAL PETROLEUM CORP ஆகிய அமெரிக்க எண்ணெய் கொள்முதல் நிறுவனங்கள் குறைந்த லாபத்தையே லிபியாவில் ஈட்டி வருவதால் அதிக லாபம் ஈட்டுவதற்காக அல்லது லிபியாவின் முழு எண்ணெய் கிணறுகளையும் மேற்காணும் நிறுவணங்களின் கீழ் நிரந்தரமாக்குவதற்காக லிபியா விஷயத்தில் பயங்கர சதி திட்டத்தை தீட்டி கச்சிதமாக காய் நகர்த்தி உள்ளனர்.

பிப்ரவரி 5ல் லிபியாவில் ஆட்சி மாற்றம் கோரி மக்கள் புரட்சி வெடித்தது மார்ச் 5க்கு இன்டர்போல் தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள 188 நாடுகளுக்கு ஆரஞ்சு நோட்டீஸ் அனுப்பி கடாபிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தஞ்சம் அளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தது. மார்ச் 12க்கு சூயஸ் கால்வாய் வழியாக இரண்டு அமெரிக்க ராட்சத போர் கப்பல்களை லிபியாவுக்கு அனுப்பி வைத்தனர். மார்ச் 15ல் ஃப்ரான்ஸ் தலைநகரில் நேட்டோவில் அங்கம் வகிக்கும் எட்டு நாடுகளின் பிரதிநிதிகள் கூடி லிபியாவின் போக்;கை கண்டித்து வாக்கெடுப்பு நடத்தினர் இதில் ஃப்ரான்ஸ் மட்டுமே எதிர்த்து வாக்களித்து பிற ஏழு நாடுகள் எதிர்ப்புத் தெரிவிக்காமல் மௌனம் காத்து நாடகமாடியது.

இதுஒரு செட்டப் என்பதை அறியாத கடாபி சந்தோஷத்தால் துள்ளிக்குதித்து போராட்டக்காரர்களை ஒடுக்குவதில் கடுமை காட்டினார் இதன் பின்னரே லிபியாக் கலவரத்தில் உயிர் பலி அதிகம் ஆனது. அடக்குமுறையை கடுமைப்படுத்தி இழந்த பல நகரங்களை போராட்டக்காரர்களிடமிருந்து ஒவ்வொன்றாக மீட்டெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் அதேக் கூட்டமைப்பு நியூயார்க்கில் அசவரமாகக் கூடி லிபியாவின் உயிர் பலியைக் கண்டித்து தீர்மாணம் நிறைவேற்றி அதை மார்ச் 18ல் ஐநாவின் கவனத்திற்கு கொண்டுசென்றனர் (டம்மி ஐ.நாவின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு முன்னரே அனைத்தும் நடந்து முடிந்து விட்டது என்பதற்கு மேற்காணும் தேதி வாரியாக குறிபிடப்பட்ட நிகழ்வுகளைக் கவனிக்கவும்).

ஐ.நா கடாபியின் மீது கண்டனம் தெரிவித்ததும் கடாபி அதற்கு கட்டுப்படுவதாக அறிவித்து விட்டு  ராணுவத் தாக்குதலை நிருத்தினார் ஆனாலும் ஏற்கனவே சி.ஐ.ஏ யின் ஃபித்னாப் படை பென்காசியில் கலவரக் காரர்களுடன் கை கோர்த்திருந்ததால் பென்காசியில் மட்டும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்.

ராணுவத்தாக்குதலை நிருத்துவதாகக் கூறிவிட்டு தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாக ஐ.நாவிடம் பொய் கூறி அதன் ஒப்புதலை மார்ச் 20க்கு பெற்று அமெரிக்கா> ஃப்ரான்ஸ்> இத்தாலி> கனடா> டேனீஸ்இங்கிலாந்தின் 25 போர்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களுடன் லிபியாவின் பலப் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் 110 ஏவுகனைகளை எடுத்த எடுப்பிலேயே வீசி தாக்குதலைத் தொடுத்து சுமார் 6 மில்லியன் மக்கள் தொகையை மட்டும் கொண்ட சின்னஞ்சிறிய லிபியாவை கரும் புகையில் மூழ்கடித்தது.

1972ல் ஜெர்மன் முனிச்சில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளச் சென்ற இஸ்ரேலிய பயங்கரவாதிகளை கடாபி கொன்றதாகவும் 1986ல் வீயன்;னாவிலும்> ரோமிலும் நடந்த குண்டு வெடிப்பில் கடாபிக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டி ரீகன் அரசு இங்கிலாந்து வழியாக கடாபியின் அரண்மனையில் குண்டு வீசினார் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தவில்லை.

இன்றும் அதே நிலையை கடைப்பிடித்து கடாபியைக் கொன்றிருந்தால் பல்லாயிரக்கணக்கான லிபியர்களை கொன்றதற்காகவும்> இஸ்லாத்திற்கு எதிரானப் போக்கை கடைப் பிடித்து கொடுங்கோல் ஆட்சி புரிந்ததற்காகவும் அதை சரி என வரவேற்றிருக்கலாம்> ஆனால் எந்த மக்களை காப்பதற்காக புறப்பட்டோம் என்றுக்கூறி களமிறங்கினார்களோ அந்த மக்களையே அதிலும் முஹம்மது(ஸல்) அவர்களை கேலிச் சித்திரம் வரைந்த டேனீஸ் நாட்டுப் படைகளையும் இணைத்துக் கொண்டு கொன்று குவிப்பது வேதனை அளிக்கிறது.  

பிப்ரவரி 5ல் லிபியாவில் மக்கள் புரட்சி வெடித்து பல்லாயிரக் கணக்கான புரட்சியாளர்கள் கடாபி அரசின் ராணுவத்தினரால் கொல்லப்பட்டது வடிகட்டிய வரம்பு மீறல் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை ஆனால் இது உள்நாட்டுப் பிரச்;சனை இதுபோல் உலகில் பலநாடுகளில் நடக்கவேச் செய்கின்றன. உதாரணத்திற்கு இலங்கையில் தனி நாடுக் கோரிய தமிழர்கள் இலங்கை அரசின் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர் மேற்குலக நாடுகளில் வாழும் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கானோர் இதைக் கண்டித்து ஊர்வலம் சென்று கண்டனம் தெரிவித்தனர். அப்பொழுது அப்பாவி மக்களை கொல்லக் கூடாது என்று மட்டுமே இலங்கைக்கு ஐ.நா கண்டனம் தெரிவித்தது.

இலங்கையில் வெறும் தேயிலைத் தூள் தான் கிடைக்கும் என்பதால் நேட்டோ நாடுகள் அவசரக் கூட்டங்கள் நடத்தி சதி திட்டங்கள் தீட்டி போர் கப்பல்களை இலங்கைக்கு அனுப்பவில்லை. இலங்கையில் எண்ணெய் வளம் இருந்தால் இந்நேரம் ராஜபக்ஷே மாளிகை தூள் தூளாகி இருக்கும் இவர்கள் வழிப்பறிக் கொள்ளையர்களை விடக் கீழானவர்கள் என்பதற்கு ஈராக்கையும்> அதற்கடுத்து லிபியாவையும் குறி வைத்தது மிகப்பெரிய உதாரணமாகும். 

ஐ.நா உருவாக்;கப்பட்டதிலிருந்தே அது முஸ்லீம் நாடுகளுக்கு உதவியாக இருந்ததில்லை என்பதற்கு லிபியாவை தாக்குவதற்காக ஐநாவின் ஒப்புதல் பெறுவதற்கு முன்பே போர் கப்பல்கள் லிபியாவில் முகாமிட்டு விட்டதும்> இன்டர்போல் தனது கட்டுப்பட்ட நாடுகளுக்கு ஆரஞ்சு நோட்டீஸ் அனுப்பி எச்சரிக்கை விடுத்ததும் ஆதாரமாகும்.

1947ல் இத்தாலியிடமிருந்து விடுதலைப் பெற்று 1951ல் ஆரம்ப காலத்திலேயே (கடாபி பொறுப்புக்கு வருவதற்கு முன்னரே) ஐநாவின் உறுப்பு நாடான லிபியா இன்று ஐ.நாவின் ஒருதலை சார்பால்  நிலைகுலைந்து நிற்கிறது. ஐ.நா வெறும் யூத> கிறித்தவ நாடுகளின் கட்டமைப்புக்கும் அவர்களின் பாதுகாப்புக்கு மட்டுமே உருவாக்கப்பட்டது என்பது தொடர்ந்து நிரூபணமாகி வருவதால் இனியும் ஐ.நாவை நம்பாமல் முஸ்லீம் நாடுகள் வெளியேறி விடுவது தான் சிறந்தது.

5:51. நம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும்> கிறித்தவர்களையும் உங்கள் பாதுகாவலர்களாக்கிக் கொள்ளாதீர்கள்!89 அவர்களில் ஒருவர் மற்றவருக்குப் பாதுகாவலர்கள். உங்களில் அவர்களைப் பொறுப்பாளராக்கிக் கொள்வோர் அவர்களைச் சார்ந்தவரே. அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

செவ்வாய், அக்டோபர் 25, 2011

.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَتَّخِذُواْ الْيَهُودَ وَالنَّصَارَى أَوْلِيَاء بَعْضُهُمْ أَوْلِيَاء بَعْضٍ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ إِنَّ اللّهَ لاَ يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ {51}

5:51. நம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும், கிறித்தவர்களையும் உங்கள் பாதுகாவலர்களாக்கிக் கொள்ளாதீர்கள்!89 அவர்களில் ஒருவர் மற்றவருக்குப் பாது காவலர்கள். உங்களில் அவர்களைப் பொறுப்பாளராக்கிக் கொள்வோர் அவர்களைச் சேர்ந்தவரே. அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்.



சுதந்திரம் தூக்கிலேற்றப்பட்டு சர்வாதிகாரம் நிலை நிருத்தப்பட்ட நாள் 30-12-2006

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


அமெரிக்காவில் சுதந்திரம் என்பதற்கு பொருள் ஃப்ரீ செக்ஸ் அதற்கு அங்கு நிருவப்பட்டு;ள்ள நிர்வாண  சுதந்திரதேவி சிலை ஒரு சான்றாகும்.

சுதந்திரம் என்றால் ஒவ்வொரு மனிதனும் தான் பிறந்த நாட்டில் தன்னுடைய மதத்தையும், கலாச்சாரத்தையும் பிறருடைய குறுக்கீடு இல்லாமல் பின்பற்றி வாழ்வதாகும்.

இதில் குறுக்கிடுவதே அமெரிக்காவின் வேலை என்பதால் சுதந்திரத்தைப பற்றி அவர்கள் வாய் திறக்கவே கூடாது ஆனால் அவ்வப்பொழுது அவர்களின் அழுகிய வாயால் பிற நாட்டைக் காட்டி அங்கே சுதநதிரம் பறி போகிறது என்று ஒப்பாரி வைப்பார்கள்.

இன்றுவரை அமெரிக்காவில் வெள்ளையனால் கொலை செய்யப்படும் கருப்பின மக்களுக்கு சுதந்திரம் கிடைக்க வில்லை

இனவெறியும்> நிறவெறியும் பிடித்த இரத்தக்காட்டேறி ஜார்ஜ் புஷ்ஷால் தனது உள்நாட்டில் தாண்டவமாடும் நிறவெறியை கட்டுப்படுத்தி அதன்மூலம் உருவாகும் கொலை வெறிதாக்குதலை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை .

ஆனால் ஈராக்கில் தனி குர்திஸ்தான் ( பிரிவினை ) கோரி கலகம் செய்த குர்துக்களின் கலவரத்தை  கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்காக அமெரிக்க நாட்டு அரக்கன் ஈராக் நாட்டு மன்னனுக்கு தூக்கு தண்டனை கொடுக்கிறானாம் ?

மதவெறி பிடித்த இவனுடைய சர்வாதிகார ஆட்சியில் மட்டும் முஸ்லீம் நாடுகளில் இவனால் கொன்றொழிக்கப்பட்ட லட்சக் கணக்கான உயிர்களுக்கும் பகரமாக இவனை தூக்கிலிடுவதாக இருந்தால் கயிற்றை இவனுடைய கழுத்தில் மாட்டி ஏற்றவும் இறக்கவுமாக ஒரு லட்சம் தடவை செய்தாலும் போதாது. இவ்வாறு நம்மால் செய்ய முடியாது ஆனால் சர்வ வல்லமை படைத்த அல்லாஹ் செய்வான்.  

ஈராக்கில் பேரழிவை ஏற்படுத்தும் பயங்கர ஆயுதங்கள் தயாரிக்கப்படுகிறது இதனால் சுற்றியுள்ள நாடுகளுக்கு பேராபத்து ஏற்படும் என்று உலக நாடுகளிடம் புருடா விட்டு ஈராக்கை அழிக்க ஆதரவைத் தேடினான்.

ஈராக்கில் சத்தாம் ரானுவத்தை பலப்படுத்தி வைத்துக் கொண்டு பக்கத்தில் உள்ள சினனஞ்சிறு எண்ணெய் வளம்மிக்க நாடுகளை ஆக்ரமித்துக் கொண்டு எண்ணெய் வளத்தை தன் கைக்குள்  கொண்;டு வந்து விட்டால் அமெரிக்கர்களாகிய நாம் விஞ்ஞானத்தில் முன்னேறி வருவது தடையாகி விடும் நம்முடைய ஒவ்வொரு நிமிடமும் அரபுநாட்டு பெட்ரோலைக் கொண்டு நகர்ந்து கொண்டிருக்கிறது அரபு நாட்டு எண்ணெய் நம்முடைய முன்னேற்றத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும் அதனால் ஈராக்குடைய ரானுவ பலத்தை குறைப்பதற்காக மட்டுமே போர் தொடுக்கிறோம் என்று உள்நாட்டு மக்களுடைய காதுகளில் பூச்சுற்றி விட்டான் கிறுஸ்தவப் போர்;வையில் உலாவரும் பழுத்த சியோனிஷ யூத வெறியன் ஜார்;புஷ்.

  • உலக நாடுகளிடமும்> உள்நாட்டிலும் கூறியவிதம் ஈராக்கில் போர் தொடுத்ததில் ஈராக்கிற்குள் எத்தனை பேரழிவு ஆயுதம் தயாரிக்கும் தொழிச்சாலைகளை கண்டுபிடிக்கப் பட்டது ?
  • எத்தனை பயங்கர ஆயுதங்கள் ( துப்பாக்கித் தவிர ) ஈராக்கியர்களுடைய கரங்களில் கண்டு பிடிக்கப் பட்டது ?
  • ஈரானை அடிப்பதற்கு அமெரிக்கா கொடுத்த ரசாயனகுண்டுகளைக கூட கண்டு பிடிக்க முடியவில்லை  !
  • நோக்கம் நிறைவேற வில்லையெனில் சத்தாமை ஏன் விடுதலை செய்யவில்லை ?
  • என்ன காரணத்திற்காக சதாம் தூக்கிலிடப் பட்டார் ?
  • நோக்கம் தோல்வியடைந்தப் பின்னும் வந்த வழியே திரும்பிச் செல்லாமல் அங்கேயே முகாமிட்டு அங்குள்ள மக்களிடம் இனக் கலவரம் ஏற்படுத்தப் பட்டது  ஏன் ?

இதற்கெ;ல்லாம் ஒரே விடை !!!  இனிவரும் காலங்களில் வளைகுடா நாட்டு மன்னர்கள்

  • எழுந்திரு என்றால் எழுந்திருக்க வேண்டும்> உட்காரு என்றால் உட்கார வேண்டும்>
  • எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பை நம்மிடம் விட்டு விடவேண்டும்..
  • இஸ்ரேல் பக்கம் தங்களுடைய விரலைக்கூட உயர்த்தி பேசக்கூடாது என்பது நோக்கமாகும்.
 தூக்கு மேடை எனக்கொரு பஞ்சுமெத்தை என்று முழங்கினான் வீரபாண்டிய கட்டபொம்மன்  என்று நாம் இளம் வயதில் பாடப்புத்தகத்தில் படித்தோம் இன்று நாம் சத்தாம் மூலமாக நேரில் அந்த வீரம் எப்படிப்பட்டது என்பதைப் பார்த்தோம் தூக்குக் கயிறைப் பார்த்தப் பின்னும் சற்றும் முகத்தில் சலனமில்லை இது ஒன்றே ஜார்ஜ் புஷ் முகத்தில் காறி உமிழப்பட்டதற்கு நிகராகும்.


ஓரிறைவனை ஏற்றுக்கொண்டதால் சியோனிஷ யூத புஷ்ஷிடமிருந்து வரும் சித்ரவதைகளை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்போம் அந்நிலையிலும் ஏகஇறைவன் ஒருவனே அவனுக்கு இணை துணை இல்லை முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் என்று சான்று பகர்ந்து விட்டே தூக்குக்கயிறை முத்தமிடுவோம் என்பதை உலகாசையில் மூழ்கிக்கிடக்கும் ரெத்தக் காட்டேரி புஷ்ஷூக்கும் அவனைப் பின்தொடரும் பரிவாரங்களுக்கும் உணர்த்துவதற்காகத் தான் இறுதியில் முகத்தை மூடவேண்டாம் என்றுக் கூறியதுடன் ஒப்பற்ற திருக்கலிமாவை முழங்கி உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் முஸ்லீம்களை உணர்வுள்ளவர்களாக விழித்தெழுந்து கொள்ள சைகை செய்தார். ( யர்ஹமுல்லாஹ்) அல்லாஹ்வின் இறக்கம் அவர் மீது உண்டாகட்டுமாக !    

சத்தாம் நாடாளும் மன்னராக இருக்கும் போது ஏகஇறைவனின் கட்டளைகளை மேன்மைப் படுத்தி வாழ்ந்தார், அதுப் போன்றே தன் நாட்டு மக்களையும் வாழச் செய்தார்> தூய இஸ்லாமிய சட்டத்தை நிலை நாட்டினார் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார் என்றெல்லாம் நாம் கூறமாட்டோம் இதிலிருந்து மாறுபட்ட படாடோபமான ஒரு வாழ்க்கை தான் அவர் வாழ்ந்தார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

சிறையில் தனக்கு உதவியாளராக நியமிக்கப்பட்டவரிடம் தான் ஒரு விவசாயி என்றுக் கூறியது போல் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் போது எளிய வாழ்க்கை வாழவில்லை.

ஆனாலும் சிறைப் பிடித்தப்பிறகு ஏக இறைவனுடைய வல்லமையை உணர்ந்தவராக தவ்பா ( பாவ மன்னிப்பு ) தேடி இருப்பார் மன்னிக்கக் கூடிய பெருந்தகையான அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவரை மன்னித்திருப்பான் சிறை பிடிக்கப்பட்டதிலிருந்து தூக்குமேடையில் திருக்கலிமாவை முழங்கும்வரை திருக்குர்ஆனை கையில் ஏந்தியவறாக இருந்தார். யார் தீமையான காரியங்களைச் செய்து>பின்னர் திருந்தி நம்பிக்கை கொள்கிறார்களோ (அவர்களை) உமது இறைவன் அதன் பிறகு மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். அல்குர்ஆன் 7:153.

சத்தாமுக்கு நிறைவேற்றப்பட்ட தூக்கு தண்டனை 
இது அந்த நாட்டு மக்களுடைய தீர்ப்பென்றெல்லாம் கூறுவது கண்துடைப்பாகும் இது இனவெறிப் பிடித்த புஷ் என்கின்ற ரத்தக் காட்டேறியுடைய தனி விருப்பமாகும்;

இனவெறிப்பிடித்த ஜார்ஜ் புஷ்ஷின் பேராவல் !

அவன் வெற்றி பெறும் போதெல்லாம் அவனுடைய வெற்றிக் களிப்பை கொண்டாடுவதற்கு தனது கிராபட் தோட்டத்திற்கு மது> மாதுடன் சென்று விடுவது வழக்கம் அதே மாதிரி சத்தாம் தூக்கிலிடப்பட்ட முஸ்லிம்களுடைய தியாகத் திருநாளன்றும் தனது உல்லாச தோட்டத்திற்கு சென்று விட்டான் அரபுநாடுகளில் சூரியன் உதிக்கத தொடங்கும் போது அமெரிக்காவில் அஸ்த்தமனமாகத தொடங்கும் அவனுடைய அந்த உல்லாச இரவில் சத்தாமை தூக்கிலிப்படப் படுவதையும் அதைக்கண்டு பெருநாளைக் கொண்டாடமல் வெகுண்டெழுந்து ஆர்ப்பரிக்கக் கூடிய ஈராக் மற்றும் உலக முஸ்லிம்களுடைய கோபத்தையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தான்.

உலக முஸ்லீம்கள் அனைவரும் தங்களுடைய ஏக இறைவனிடத்தில் அந்த கொடுங்கோலனை ஒப்படைத்து விட்டனர் நிச்சயமாக அல்லாஹ் அவனுக்கு ஒரு முடிவை இதுவரை எழுதி வைத்திருப்பான் அது அவனை வந்தடையவேச் செய்யும் ஆனாலும் இதன் மூலம் இந்த முஸ்லீம் சமுதாயம் படிப்பினைப் பெறவேண்டும் படிப்பினைப் பெறவிலலை என்றால் இது இன்னும் தொடரும்

நம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும்> கிறித்தவர்களையும் உங்கள் பாதுகாவலர்களாக்கிக் கொள்ளாதீர்கள்!89 அவர்களில் ஒருவர் மற்றவருக்குப் பாதுகாவலர்கள். உங்களில் அவர்களைப் பொறுப்பாளராக்கிக் கொள்வோர் அவர்களைச் சார்ந்தவரே. அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான். 5:51 

ஆறிலும் சாவு> நூரிலும் சாவு என்று சொல்வதுப் போல் இப்பொழுதே துணிந்து இங்கிருந்து அந்த ஓநாய்களை விரட்டியடிக்க வில்லை என்றால் நாளை சத்தாமைப் போன்றே மற்றுமுள்ள மன்னர்களுக்கும் இதே கெதி ஏற்படும் என்பதை மேற்கானும் குர்ஆனுடைய கூற்றிலிருந்து விளங்கிக் கொள்ள வேண்டும் உலகம் முடியும் காலம்வரை சத்தியக் குர்ஆனுடைய ஒவ்வொரு சொல்லும் நிகழ்ந்து கொண்டிருக்கும்

ஏகஇறைவனை மறுக்கும் யூதர்களும்> கிறிஸ்தவர்களும் இப்படிப்பட்டவர்கள் தான் என்பதை  1400 வருடங்களுக்கு முன்பே அல்லாஹ் கூறிவிட்டதால் உலகாதாயத்தை முன்னிருத்தி அரச பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக அல்லாஹ் எச்சரித்துக் கூறியவர்களை உள்ளே நுழைத்ததால் ஏற்பட்ட விபரீதங்களேயாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்.




وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்